டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா குருநாத் மாந்தரேவுக்கு 14 நாட்கள் சிபிஐ காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதாக மனிஷா குருநாத் மாந்தரே கைது செய்யப்பட்டார். நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் உள்ள அனைவரையும் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
