ஜெய்ப்பூர்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே ரயில் சென்றபோது ஒரு பயணிகள் பெட்டியில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ராஜதானி விரைவு ரயிலின் ஒரு பயணிகள் பெட்டி முழுமையாக எரிந்து சேதம் ஆகியுள்ளது. ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதும் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
