×

அதிமுக விவகாரம் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: சபாநாயகர் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜே.சி.டி.பிரபாகர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது; அவ்வை சண்முகம் சாலையில் அமைந்திருக்கிற சிறிய சந்தில் பல தலைமுறையாக குடியிருக்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள்ளாக அங்கு இருக்கக்கூடிய கழிவுநீர் அகற்றுகிற அந்த பிரச்னை முற்றிடுமாகத் தீர்க்கப்படும். ஒரு மாத காலத்திற்குள்ளாக தற்காலிக சாலை அமைக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து பொதுநல சங்கங்களையும் ஒருங்கிணைத்து மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கிற பணிகளை முடுக்கி விட இருக்கிறோம்.

அதிமுக இரண்டு அணிகள் விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்தவர், இரண்டு தரப்பினரும் மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். அத்தனை மனுக்களும் ஆய்விலே இருக்கிறது. உரிய நேரத்திலே உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Aiyaram Vilakku ,MLA ,J.C.T. Prabhakar ,Avvai Shanmugam Road ,
× RELATED பெட்ரோல் – டீசல் விலை உயர்வு கண்டித்து...