- செங்கல்பட்டு
- வளிமண்டலவியல் திணைக்களம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- விழுப்புரம்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
செங்கல்பட்டு: தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கடுமையாக மக்களை வாட்டி வந்த நிலையில் செங்கல்பட்டில் திடீரென மாறிய வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தீடீரென சற்று நேரம் மழை பெய்ததை தொடர்ந்து வானிலை மாற்றத்தால் மாலை 6 மணியை போல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. செங்கல்பட்டில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது.
