சேலம்: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கடந்த 11ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கியுள்ளார். அவரது கணவர் மற்றும் அவரது அண்ணன் வீட்டுக்கு வெளியே படுத்திருந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் பரத்(18) என்பவர் கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று தனியாக தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்சியடைந்த அவர் சத்தம் போடவே, வெளியே தூங்கி கொண்டிருந்த இருவரும் உள்ளே சென்று, அங்கிருந்த பரத்தை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து பரத் தப்பி ஓடி உள்ளான்.
இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார். தாக்குதலில் காயமடைந்த பரத் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் பரத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
