×

ஜி.சி.டி.யில் ஓட்டு எண்ணிக்கை மையம்

கோவை, மார்ச் 2: கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ெதாண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான 10 தொகுதிகளுக்கு, ஓட்டு மெசின்களை பாதுகாப்பாக வைக்க 10 ஸ்ட்ராங்க் ரூம் அமைக்கப்படும். இந்த அறையில் ஜன்னல் மற்றும் எந்த துவாரமும் இல்லாமல் முழுவதும் அடைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சுமார் ஒரு மாதம் ஓட்டு மெசின்கள் வைக்கப்படவுள்ளது. இங்கே ஓட்டுப்பதிவு மெசின்கள் வந்த நாளில் இருந்து எண்ணிக்கை முடியும் வரையுள்ள அனைத்து நாட்களிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு கேமரா வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எண்ணிக்கை மையத்தில் 21 ரவுண்ட் டேபிள் அமைக்க, மின் விளக்கு மற்றும் பிளக் பாயிண்ட் வசதிகளுடன் தடுப்பு பகுதிகள் அமைக்கும் பணியும் விரைவில் துவக்கப்படவுள்ளது. ஸ்ட்ராங்க் ரூமில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டு மெஷின்களையும், கட்டுப்பாட்டு கருவிகளையும் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையங்கள் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடப்படும்.

Tags : GCD ,
× RELATED கோவை ஜிசிடி எண்ணிக்கை மையத்தில் ஓட்டு...