×

கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை: கோடை விடுமுறை, முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 14ம் தேதி 80 பேருந்துகளும், 15ம் தேதி 655 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 15, 16ம் தேதிகளில் 120 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 15, 16ம் தேதிகளில் 25 சிறப்புப் பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Tags : Muhurtham ,Chennai ,State Transport Corporation ,Klambakh ,Coimbet ,
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!