சென்னை: அவையின் மாண்புகளைக் காப்போம்; தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்போம் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர், துணைத் தலைவராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் ஊரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவராக ஜே.சி.டி. பிரபாகர்; முதல்வர் விஜய்யை மக்கள் இன்னொரு எம்ஜிஆராகத்தான் பார்க்கிறார்கள். போதையில்லா தமிழ்நாட்டை முன்னெடுக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தேர்தலில் அலை வீசியது; விஜய் அலை; வெற்றி அலை; விசில் அலை.
சூழ்ச்சிகள், தந்திரங்கள், தடைகளை தாண்டி முதல்வர் விஜய் வெற்றி; மாற்றத்துக்கான மக்களின் விருப்பம் தமிழக வெற்றிக் கழகம். எவ்வளவோ பிரச்சினைகள் வந்தபோதும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி விட்டார். சாதி, மதம், இனம் பார்க்காமல், பணம் பெறாமல் மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். கட்சி சார்பின்றி செயல்படுவேன்; அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பேன்; தரமான விவாதங்கள் நடக்கும். அவையின் மாண்புகளைக் காப்போம்; தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்போம்.
அரசியல் மோதல்களுக்காக மக்கள் நம்மை அவைக்கு அனுப்பவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பேரவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை வழங்கப்படும். தமிழுக்கு முதலிடம் என்பதில் உறுதியாக இருப்பேன் என்று கூறினார்.
