×

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடன் பயிலும் மாணவர்கள் மது அருந்தியபோது ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதால் அவர்களுக்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தனர். மேலும், கொலை செய்யும் காட்சியை காணொலியில் பதிவு செய்து கொண்டுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது மனிதர்களை எந்த அளவுக்கு அடிமையாக்கிறது என்பது எடுத்துக்காட்டு இதுதான். ஒன்றாக பழகிய நண்பனை கொலை செய்தது மட்டுமின்றி அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனை கொடூரனாக மாற்றியிருக்கிறது.

மதுவை விட கஞ்சா போதைப்பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன. தமிழ்நாட்டில் மதுவும், பிற போதை பொருள்களும் ஒழிக்கபட வேண்டும் . மேலும் தமிழ்நாட்டில் முற்றிலுமாக மதுப்போதையை ஒழிக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Tags : Anbumani ,Seelanayakkanpatti, ,Salem district ,Gokul ,
× RELATED VB G RAM G திட்டம் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!