சென்னை: பாஜக என்று சொல்ல பயம் ஏன் என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் “புதிய அரசு அமைக்க நடைமுறைகளைத் தொடங்க வேண்டும் என எங்கள் கழகத் தலைவர் நேற்று முன்தினமே ஆளுநரை வலியுறுத்தி இருக்கிறார்.
“நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஆதரிக்கிறேன்” என்று கூட்டணி கட்சிகளையும் அழைத்து சொல்லிவிட்டார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெக தலைவர் விஜயோ ஆளுநர், பாஜக குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
பாசிச பாயசம் இனிப்பதாலா ?
எங்கள் தலைவர் தெளிவாக சொன்ன பிறகும் குதிரை பேரம் எதற்கு ?
பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு ?” எனவும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
