×

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

டெல்லி: நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணியை புதிய முப்படைகளின் தலைமைத் தளபதியாக (Chief of Defence Staff – CDS) நியமித்துள்ளது. அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார். குறிப்பாக, தற்போதைய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், 2026 மே 30 அன்று தனது பதவிக்காலத்தை நிறைவு செய்கிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் (NSCS) ராணுவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, அவர் ராணுவத்தின் துணைத் தளபதியாக இருந்தார். மேலும், அவர் மத்திய கட்டளையின் (Central Command) ஜெனரல் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப் என்ற பொறுப்பையும் வகித்துள்ளார்.

Tags : Tripartite Army ,N. S. ,Raja Subramani ,Delhi ,Lieutenant ,Union Government ,King Subramani ,Anil Chaukan ,Government of India ,
× RELATED பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு...