×

வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம் மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

 

தேனி, மே, 9: தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தையொட்டி, வருகிற 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 12ம் தேதி முதல் வருகிற மே 19ம் தேதிவரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும், அன்றைய தினம் உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுவாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த உள்ளுர் விடுமுறையானது, செலவாணி முறிச்சட்டம்-1881 கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேலும், இந்த உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வருகிற 30ம் தேதி (சனிக்கிழமை) மாற்று வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags : Veerapandi Chithirai festival ,Theni ,Chithirai festival ,Gaumariyamman temple ,Veerapandi ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது