×

கஞ்சாவுடன் வாலிபர் கைது

ராஜபாளையம், மே 28: ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் முகம்மது அப்துல்காதர் தலைமையில் காவல் துறையினர் எஸ்.ராமலிங்காபுரம் கிராமப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பள்ளி அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனை போட்டனர்.

அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் சத்தியபிரகாஷ்(19) என்பது தெரிந்தது. இதையடுத்து 95 கிராம் கஞ்சாவை கைப்பற்றி இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Rajapalayam ,Sub-Inspector ,Mohammed Abdulkadhar ,Keelarajakularaman Police Station ,S. Ramalingapuram ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது