×

சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது

சிவகாசி, மே 28: சிவகாசியில் சுடுகாட்டில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.சிவகாசி கிழக்கு மீனம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சுடுகாட்டில் சிலர் அமர்ந்திருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது அங்கிருந்து 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதில் ஆறுமுகம் (26) என்ற வாலிபர் மட்டும் போலீசிடம் சிக்கினார். அவரிடம் இருந்து போலீசார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டூவீலரை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Sutugat ,Sivakasi East Fishampatty ,
× RELATED விருதுநகர் சிறையில் திறப்பு சந்திப்பு சட்ட உதவி மையம்