×

வித்யாகிரி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

 

காரைக்குடி, மே 9: காரைக்குடி மற்றும் புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் அனைவரும் வெற்றி பெற்று தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2வில் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி பவானி 600க்கு 581 மார்க் பெற்றுள்ளார். இவர் தமிழ் பாடத்தில் 99, ஆங்கிலம் 90, பொருளியல் 98, வணிகவியல் 95, கணக்குப்பதிவியல் 99, வணிகக்கணிதத்தில் 100 மார்க் பெற்றுள்ளார். சுபிஷா 575 மார்க் பெற்றுள்ளார். இவர் தமிழ் 97, ஆங்கிலம் 97, இயற்பியல் 88, வேதியியல் 98, கணினி அறிவியல் 97, கணிதவியல் 96 மார்க் பெற்றுள்ளார். பரத்ராஜ் 570 பெற்றுள்ளார்.
காயத்திரி 563, தரணிதரன் 562 பெற்றுள்ளனர். ஜெயந்திகா, சண்முகப்பிரியா இருவரும் 559 பெற்றுள்ளனர். மாஹா 556, சுவேதா 553 பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் முனைவர் ஆர்.சுவாமிநாதன், பொருளாளர் முகமதுமீரா, கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஜஸ்வர்யா சரண் சுந்தர், பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags : Vidyagiri Matriculation School ,Karaikudi ,Vidyagiri Matriculation Higher Secondary School ,Puduvayal ,Karaikudi… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது