×

டூவீலர் விபத்தில் வாலிபர் படுகாயம்

 

கடத்தூர், மே 9: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே கெடகோரஅள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெங்கடேஷ்(40). இவர் சொந்த வேலைக்காக கடத்தூர்- பொம்மிடி சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாசு மண்டி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த மற்றொரு டூவீலர் மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த வெங்கடேஷை, அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kadtur ,Venkatesh ,Mariyappan ,Ketagoraalli ,Dharmapuri district ,Kadtur-Bommidi road ,Vasu Mandi ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது