×

விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்

 

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத், கடந்த 2 நாட்களுக்கு முன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சட்டசபை தேர்​தலில் 108 இடங்களுடன் தனிப்​பெரும் கட்​சி​யாக தவெக உருவெடுத்துள்ளது. எனவே விஜய் தலை​மை​யில் ஆட்சி அமைக்க அனைத்​து கட்​சிகளின் எம்​எல்​ஏக்​களும், தலை​வர்​களும் பெருந்​தன்​மையுடன் ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். அதன்​பின், தவெக ஆட்​சி​யின் செயல்​பாடு​களை பொறுத்​து, ஒவ்​வொரு கட்​சி​யும் தங்​கள் கொள்​கைகளுக்கு ஏற்ப முடி​ெடுத்து நாகரிக அரசியலை முன்​னெடுத்​துச் செல்ல வேண்​டும். மக்​களின் தீர்ப்​புக்கு தலை​வணங்​கி, தமிழக அரசியலில் ‘கு​திரை பேரம்’ என்ற அவப்​பெயருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். தவெக எந்​த​வித அழுத்​த​மும் இன்றி சுதந்​திர​மாக ஆட்சி அமைக்​க​வும், அவர்​கள் விரும்​பி​னால் மட்​டுமே கூட்​டணி அமைக்​க​வும் அனைத்து கட்சிகளும் முன்வர வேண்​டும்,’ என்று தெரிவித்து இருந்தார்.
இது தொடர்​பாக பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித்ஷா, பாஜ தேசிய தலை​வர் ஆகியோ​ருக்கு கடிதம் எழு​தி​யிருந்தார். விஜய்க்கு தேசிய ஜனநாயக கூட்டணி முழு ஆதரவு அளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

விஜய்க்கு பாஜ ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பிரசாந்தின் இந்த அறிக்கை பாஜவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று பாஜ தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பாஜ செய்தி தொடர்பாளர் ஏ.என்.பிரசாரத், பாஜவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஏ.என்.பிரசாத், கடந்த மார்ச் மாதம், தவெக தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். இது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது எனக் கருதப்பட்டதால், அவர் அப்போது தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர் கட்சி பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : BJP ,Vijay ,Chennai ,Nainar Nagendran ,TDP ,Tamil Nadu ,A.N.S.Prasad ,
× RELATED மோடிக்கு ஆதரவாக வாய்ஸ் தரும் சிவகாசி தவெக பெண் எம்எல்ஏ: வீடியோ வைரல்