ஜெயங்கொண்டம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. அதில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் மெட்ரிக் பள்ளி மாணவி ரிக் ஷிதா மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-99, இயற்பியல்-100, வேதியல்-100, உயிரியல்-100, கணிதம்-100 என மொத்த மதிப்பெண்கள் 600க்கு 598. சாதனை மாணவிக்கு அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து, மாணவி ரிக்க்ஷிதா கூறும்போது, பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். அதற்காக கடும் முயற்சி செய்து பயின்றேன். எனக்கு பள்ளி நிர்வாகத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் வாயிலாக நான் தற்போது 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். கலெக்டருக்கு படித்து, பொதுமக்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். என்னைப் போன்ற மாணவர்கள் நன்கு பயிற்சி எடுத்து புரிந்து கொண்டு படித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்றார்.
