×

பொன்னமராவதி அருகே திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்தது

பொன்னமராவதி, மே 7: பொன்னமராவதியில் திடீர் என தீப்பற்றி மூன்று கடைகள் எரிந்து சேதமாகின. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டி ரேடியோ பொட்டல் என்ற இடத்தில் திடீர் என கடைகளில் தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயை அணைத்துள்ளனர். ஆயினும் முடியவில்லை. இதனை தொடர்ந்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர்.

இதனால் பெரும்தீ விபத்து தடுக்கப்பட்டது. ஆயினும் ஜியாவுதீன் என்பவரின் நகை பாலிஸ் செய்யும் கடை, சரவணன் என்பவரது டீக்கடை, ராஜா என்பவரது சைக்கிள் கடை ஆகிய மூன்று கடைகளும் முழுவதும் எரிந்துள்ளது. இதில் சைக்கிள் கள், உதிரி பாகங்கள், டீக்கடையில் இருந்த தளவாடச்சாமான்கள் மற்றும் டீக்கடைக்கு தேவையான சாமான்கள், நகை பாலிஸ் பொருட்கள் தளவாடப்பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. டீக்கடையில் அணைக்கப்படாத தீ பற்றி எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. பொன்னமராவதியின் மையப்பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் இப்பகுதியில் பெரும் பதட்டமாக காணப்பட்டது.

Tags : Ponnamarawati ,Pudukkottai district ,Pudupatti Radio Bottle ,
× RELATED பள்ளிபாளையம் நகராட்சி ஆபீஸ் முன் ஒரு...