தேன்கனிக்கோட்டை, மே 7: அஞ்செட்டி அருகே, வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே என்.புதூர் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை என்.புதூர் கிராமத்தில் வசிக்கும் கோட்டைவீரன் மகன் முனியப்பன்(30) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, வீட்டில் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்ததாக முனியப்பன் தெரிவித்தார். இதையடுத்து, அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக முனியப்பனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
