×

விஜய்யுடன் தலைமை செயலர் டிஜிபி, கமிஷனர் ஆலோசனை: டிஐஜி, 2 எஸ்பிக்கள் பாதுகாப்புக்கு நியமனம்

சென்னை: தவெக கட்சி தலைவர் விஜய்யுடன் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி, போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் புதிய முதல்வராக விஜய் இன்று பதவியேற்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், மேடை அலங்காரம் என அனைத்தும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தவெக கட்சி தலைவர் விஜய்யை தமிழக தலைமை செயலாளர் சாய்குமார், தமிழக டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், சென்னை மாநகர ஆணையர் அபின் தினேஷ் மோதக் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் நடந்தது. அப்போது, இன்று பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர், 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே பதவியேற்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்து விட்டதால், இன்று முதல்வராக பதவியேற்க இருந்த விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கின் மேடையில் இருந்த மின்விளக்குகள் உள்ளிட்டைவகள் நேற்று மாலை அகற்றப்பட்டன.

அதே நேரத்தில் முன் னாள் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், டிஜிபி அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் அதி காரி ஆகியோர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேசினர். மேலும் திமுக ஆட்சியில் செல்வாக்காக இருந்த ஐஏஎஸ் அதிகாரி, துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும் விஜய்யி டம் தொடர்பு கொண்டு வாழ்ததும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரியாக டிஐஜி தர்மராஜ், கள்ளக்குறிச்சி எஸ்பி அரவிந்தன், அரியலூர் எஸ்பி விஸ்வேஸ் பாலசுப்பிர மணியன் சாஸ்திரி ஆகியோரை நியமித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Secretary ,TGB ,Vijay ,TIG ,Chennai ,Daveka Party ,Tamil Nadu ,Chennai Nehru Home Stadium ,
× RELATED ராஜிவ் கொலையில் கைதாகி விடுதலையான...