மாட்ரிட்: ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். இப்போட்டியில் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் ஜானிக் சின்னர் வெல்லும் முதல் மாட்ரிட் ஓபன் பட்டம் இதுவாகும். கடந்தாண்டு பாரீஸ் மாஸ்டர்ஸ், இண்டியன்வெல்ஸ், மியாமி ஓபன், மான்டே கார்லோ மற்றும் தற்போது மாட்ரிட் ஓபன் என மாஸ்டர்ஸ் டென்னிஸ் வரலாற்றில் தொடர்ந்து 5 பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்நிலையில், சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஜானிக் சின்னர் முதலிடத்தில் நீடிக்கிறார். 2ம் இடத்தில் கார்லோஸ் அல்காரஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். 3ம் இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 4ம் இடத்தில் ஆர்தர் ஃபில்ஸ், 5ம் இடத்தில் டேனியல் மெட்வெடேவ் மற்றும் 7ம் இடத்தி நோவக் ஜோகோவிச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
