×

ஐதராபாத்தில் இன்று மோதல்: பஞ்சாப்பை பழித்தீர்க்குமா சன்ரைசர்ஸ்

ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி ஆடிய 9 போட்டியில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஆடிய 9 போட்டியில் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 13 புள்ளிகள் (ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வழங்கப்பட்டது) பெற்று 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற ஐதராபாத் அணி, கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது. இதேபோல், முதல் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக வென்ற பஞ்சாப் அணி கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதனால், இன்று ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தில் சன்ரைசர்ஸ் பதிலடி தருமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

இரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டி முக்கியத்துவதும் வாய்ந்தது என்பதாலும், முதல் இடத்தை பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா, கிளாசன், இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட், சலீல் அரோரா, அனிகேத் வர்மா போன்ற வலுவான பேட்டிங் உள்ளது.

பேட் கம்மின்ஸ் மற்றும் இளம் வேகபந்து வீச்சி புயல்களும் மிரட்டுவதால் சன்ரைசர்ஸ் ஒரு வலுவான அணியாக இந்த போட்டியில் களமிறங்குகிறது. இதேபோல், பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர், கூப்பர் கனோலி, ஸ்டோய்னிஸ் போன்ற அதரடி பேட்ஸ்மேன்களும், அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களும் உள்ளதால் இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Hyderabad ,Sunrisers ,Punjab ,49th league ,IPL ,Punjab Kings ,
× RELATED நம்பர் 1 சின்னர்