×

தாராபுரம் தொகுதியில் 2 தேர்தலுக்குப்பின் அதிமுக வெற்றி

திருப்பூர், மே 5: தாராபுரம் தொகுதியில் 2 தேர்தலுக்குப்பின்னர் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் இந்திராணி, அதிமுக சார்பில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 9 பேர் போட்டியிட்டனர்.

கடந்த 23ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 95,384 பேரும், பெண்கள் 1,02,196 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என 1,97,582 வாக்களித்தனர். பதிவான வாக்குகள் நேற்று திருப்பூர் பல்லடம் சாலை எல்ஆர்ஜி கல்லூரியில் எண்ணப்பட்டன. 2,508 தபால் வாக்குகளும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளர் சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:

மொத்த வாக்குகள் 2,22,402, பதிவான வாக்குகள் 1,97,582, சத்யபாமா (அதிமுக) -81,100, இந்திராணி (திமுக) -64,373, கெளரி சித்ரா(தவெக) -46,438, திவ்யா(நாதக) -6,026, ரோகினி(சுயே) -357, மோகன்ராஜ்(சுயே) -174, ஆனந்தி(சுயே) -151, இந்திராணி(சுயே) -142, கெளரி(சுயே) -125, நோட்டா -1058
தாராபுரம் தொகுதியில் அதிமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2 தேர்தலுக்கு (2016, 2021ம் ஆண்டு) பிறகு வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. பொன்னுசாமி வெற்றி பெற்று 2016ம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். தற்போது நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றிபெற்றிருக்கிறார். வேட்பாளர் சத்யபாமா தேர்தல் நடத்தும் அலுவலர் பிளிக்ஸ் ராஜாவிடம் வெற்றி சான்றிதழை பெற்றார்.

 

Tags : AIADMK ,Tarapuram constituency ,Tiruppur ,Tarapuram ,Indrani ,DMK ,president ,Sathyabhama ,
× RELATED கொழுமம் கோட்டை மாரியம்மன் கோயில் பக்தர்கள் பூவோடு ஊர்வலம்