திருப்பூர், மே 6: சித்தி திட்டியதால் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பீகாரை சேர்ந்தவர் சீதாராம். இவரது மகன் விவேக்குமார் (15). இவர் பிறந்த உடன் முதல் மனைவி இறந்துவிட்டார். அதன் பின்னர் 2வதாக சீதாதேவி என்பவரை சீதாராம் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் திருப்பூர் கருவம்பாளையம் அடுத்த ஆலாங்காடு பகுதியில் வசித்து வந்தார். சிறுவனை அருகில் உள்ள ஜூஸ் கடையில் வேலைக்கு சேர்த்தனர். கடந்த 3 நாட்களாக சிறுவனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிறுவன் வேலைக்கு செல்லவில்லை. இதனை சித்தி கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
