×

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூர், ஏப்.30: அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம் பாளையத்தில் பழமை வாய்ந்த செல்லியாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத குண்டம் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

நேற்று முன்தினம், பவானி காவிரியாற்றிலிருந்து, கோவில் தீர்த்தகுடம் எடுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று புனித தீர்த்தத்தை, உடைத்த தேங்காயில் ஊற்றி, திரியை வைத்து விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், காப்புகட்டி விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோயில் தீர்த்தக்குடம் ஏலம் நடந்தது. இதில் அதே ஊரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரூ.5 லட்சத்திற்கு தீர்த்தக்குடத்தை ஏலம் எடுத்தனர்.

 

 

Tags : Celliandyamman Temple Kundam Festival ,Anthiyur ,Celliandyamman ,Temple ,Sembulicham Palayam ,Chithirai month Kundam festival ,
× RELATED இளம்பெண் மாயம்: தாய் புகார்