×

மொபட் மீது பைக் மோதி விவசாயி பலி

கோபி, ஏப்.30: கோபி அருகே உள்ள நரியம்பள்ளத்தில் மொபட் மீது பைக் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள வடக்கு காவேரிபாளையம் கொல்லங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (45). விவசாயி. இவர், நேற்று மொபட்டில் மணியகாரன்புதூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததார்.

அப்போது, நரியம்பள்ளம் என்ற இடத்தில் எதிரே வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூர் தேவி நகரை சேர்ந்த கேசவா (21) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மீது மொபட் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நந்தகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Gopi ,Nariamballam ,Nandakumar ,Kollankadu Estate ,North Cauverypalayam ,Maniyakaranputhur ,
× RELATED 3.600 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பி ஓடிய நபருக்கு வலை