×

சத்தியமங்கலத்தில் 1,662 வாழைத்தார் ரூ.2.97 லட்சத்துக்கு ஏலம்

சத்தியமங்கலம், ஏப்.25: சத்தியமங்கலத்தில் 1,662 வாழைத்தார்கள் ரூ.2.97 லட்சத்துக்கு ஏலம் போனது. சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 162 விவசாயிகள் 1,662 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதில், செவ்வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.890க்கு விற்பனையானது.தேன் வாழை ரூ.660, பூவன் ரூ. 620, ரஸ்தாளி ரூ.580, மொந்தன் ரூ.190, பச்சை நாடன் ரூ.460, கதலி கிலோ ரூ.41, நேந்திரன் கிலோ ரூ.25க்கு விற்பனையானது. மொத்தம் 1662 வாழைத்தார்கள் ரூ. 2.97 லட்சத்திற்கு விற்பனையானது. ஏலத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 வியாபாரிகள் கலந்து கொண்டு கொள்முதல் செய்தனர்.

 

Tags : Sathyamangalam ,Sathyamangalam Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED 3.600 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பி ஓடிய நபருக்கு வலை