×

சில்லிபாயிண்ட்…

* ரியான் பராக்கிற்கு 25 சதவீத அபராதம்
புதுடெல்லி: முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக், இ-சிகரெட் புகைத்த காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனத்ததை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், போட்டி கட்டணத்தில் 25 சதவீதத்தை பிசிசிஐ அபராதமாக விதித்துள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக, கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

* ராட்டர்டாம் அணியை வாங்கிய கிளாசன்
ராட்டர்டாம்: நெதர்லாந்தில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் (ஈடிபிஎல்) இடம்பெற்றுள்ள ராட்டர்டாம் அணியை தென் ஆப்ரிக்காவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஜான்டி ரோட்ஸ், பாப் டூப்ளெசிஸ், ஹென்றிச் கிளாசன் ஆகிய மூவரும் கூட்டாக சேர்ந்து வாங்கி உள்ளனர். வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதி வரை ஈடிபிஎல் போட்டிகள் முதல் முறையாக நடைபெற உள்ளன. இதில் ராட்டர்டாம் அணி விளையாட உள்ளது. தவிர, கிளாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், எடின்பர்க், டூப்ளின், பெல்பாஸ்ட் ஆகிய அணிகளும் ஈடிபிஎல்லில் இடம்பெற்றுள்ளன.

* மாட்ரிட்-ஆர்சனல் போட்டி டிரா
மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதிப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் நேற்று அத்லெடிகோ மாட்ரிட் – ஆர்சனல் அணிகள் மோதின. போட்டியின் 44வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் விக்டர் கியோகெரெஸ், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோல் போட்டார். அதைத் தொடர்ந்து, 56வது நிமிடத்தில் அத்லெடிகோ அணியின் ஜூடியன் அல்வாரெஸ், பெனால்டி கார்னர் முறையில் கோலடித்தார். அதன் பின் கோல்கள் விழாததால், இப்போட்டி, 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Tags : Ryan Barak ,New Delhi ,Rajasthan Royals ,Punjab Kings ,Mullanpur ,
× RELATED வங்கதேச அணிக்கு எதிராக டி20 கலக்கலாய்...