×

பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் அகற்றும் பணி தீவிரம்

திருப்பூர், ஏப்.30: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதற்காக, திருப்பூரில் உள்ள பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் முன்பாக அந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர் அவர்களின் சின்னம் அடங்கிய மாதிரி பேலட் சீட்டுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பதாகைகள் ஆகியவை ஒட்டப்பட்டிருந்தன.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் 2026-27ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகியவை நடைபெற இருப்பதன் காரணமாக வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட வகுப்பறைகளின் முன்பு ஒட்டப்பட்டு இருந்த விழிப்புணர்வு போஸ்டர்கள் அகற்றப்பட்டு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Tags : Tiruppur ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu ,
× RELATED பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்