- காங்கேயம்
- பிரவிந்த்குமார்
- வைட்டிலியாங்கட்
- முண்டினம்
- PAP கால்வாய்
- அவினாசிபாளையம்
- கங்கையாம்
- பிரவீன் குமார்
காங்கயம், ஏப்.22: வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பிரவீன்குமார் (26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காங்கயம் அருகே அவினாசிபாளையத்தில் பிஏபி கால்வாயில் குளிக்க சென்றார். வாய்க்கால் நீரில் இழுத்து செல்லப்பட்ட பிரவீன்குமார் நீரில் மூழ்கினார். அவரை தேடி வந்தனர். நேற்று காலை காங்கயம் அடுத்த பாப்பினி கிராமம் காமாட்சி வலசில் நீரில் மிதந்து வந்த பிரவீன்குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காங்கயம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
