×

3.600 கிலோ கஞ்சா பறிமுதல் தப்பி ஓடிய நபருக்கு வலை

ஈரோடு, ஏப். 30: ஈரோடு அடுத்த வெண்டிபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரை பகுதியில் எஸ்ஐ சிவகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நின்றிருந்த மர்மநபர் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றபோது, அந்த நபரின் கையில் இருந்த வெள்ளை சாக்கு பையை புதரில் எரிந்து விட்டு தப்பி சென்றார்.

இதையடுத்து போலீசார் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 3.600 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிந்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : Erode ,SI Sivakumar ,Kalingarayan Vaikkal ,Vendipalayam ,
× RELATED பண்ணாரி அம்மன் கோயிலில் அமைச்சர்கள் சாமி தரிசனம்