×

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு வரும் 1ம் தேதி விடுமுறை கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, ஏப்.29: மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தொழிலாளர் தினத்தை முன்னி்ட்டு (மே தினம்) வரும் 1ம் தேதியன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் (பார்கள்), உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் 1ம் தேதி மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : TASMAC ,Tiruvannamalai ,Collector ,Dharbagaraj ,Labour Day ,
× RELATED மர்ம நபர்கள் வைத்த தீயால் எரிந்த பனை...