பேரூராட்சி ஊழியரின் டூவீலருக்கு தீ வைப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.24: பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சத்தியசுந்தரம்(38). இவர், பேரூராட்சி அலுவலகத்தில், டெங்கு மருந்தடிக்கும் பணி செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலருக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது, பெட்ரோல் டேங்க் வெடித்ததில் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, பைக் எரிந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதிலும் பைக் முற்றிலும் எரிந்து போனது. இதுகுறித்து, பள்ளிப்பட்டி போலீசில் சத்திய சுந்தரம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More