- அஇஅதிமுக
- திமுக
- அமைச்சர்
- பி மூர்த்தி
- மதுரை கிழக்கு
- மதுரை
- சத்திரப்பட்டி
- பாலகிருஷ்ணன்
- திமுக கிழக்கு
- வடக்கு மாவட்டம்
- திருப்பாளையம், மதுரை
மதுரை, ஏப். 20: மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்டது சத்திரப்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரது தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை திருப்பாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர், மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்ற அமைச்சர் பி.மூர்த்தி திராவிட மாடல் அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இன்று கட்சியில் இணைந்துள்ள அனைவரும் மீண்டும் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவும், கிழக்கு தொகுதி மேலும் பல திட்டங்களை பெற்றிடவும் சிறப்பான களப்பணி செய்திட வேண்டுமென கேட்டு கொண்டார்.
