- ஸ்டட்கார்ட் மகளிர் டென்னிஸ்
- ரைபாக்கினா
- ஸ்டட்கர்ட்
- கஜகஸ்தான்
- எலெனா ரைபாக்கினா
- ஸ்டுட்கார்ட் ஓபன் மகளிர்
- ஸ்டுட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி
- ஸ்டட்கர்ட், ஜெர்மனி
ஸ்டட்கார்ட்: ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, செக் வீராங்கனை கரோலினா முஸோவா மோதினர்.
முதல் செட்டில் இருவரும் புள்ளிகளை பெற கடுமையாக போட்டி போட்டனர். கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் ரைபாகினா வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ரைபாகினா, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு வெற்றிக் கோப்பையும் ரூ.1.80 கோடி பரிசும் கிடைத்தது.
