×

நியூ சண்டிகரில் இன்று மோதல்: பஞ்சாப் கிங்ஸ் அதிரடியை சமாளிக்குமா லக்னோ?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கிய போட்டியில் கேகேஆர்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதி வருகின்றன. கேகேஆர் வெற்றி கணக்கை தொடங்கிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. நடப்பு சீசனில் தோல்வியையே சந்திக்காத பஞ்சாப் பேட்டிங், பவுலிங்கில் அசூர பலத்தில் உள்ளது. பிரப்சிம்ரன் சிங் ,பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கனோலி, கேப்டன் ஸ்ரேயாஸ் அதிரடியில் மிரட்டுகின்றனர். பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், வைஷ்யாக், சாஹல், மார்கோ ஜான்சன் அசத்தி வருகின்றனர்.

மறுபுறம் லக்னோ 5போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியடைந்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பன்ட், மார்க்கரம், மிட்செல் மார்சால் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பூரன் அவுட்ஆப் பார்மில் உள்ளார். பவுலிங்கில் ஷமி, பிரின்ஸ் யாதவ், அவேஷ்கான் ஓரளவு சிறப்பாக செயல்படுகின்றனர். இருப்பினும் பஞ்சாப் அதிரடிக்கு லக்னோ தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 6 முறை மோதி உள்ளன. இதில் தலா 3ல் வென்றுள்ளன.

Tags : New Chandigarh ,Lucknow ,Punjab Kings' ,Kolkata ,IPL ,KKR ,Rajasthan Royals ,Eden Gardens ,New Chandigarh… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு...