- க்ரூஸேடர் அரசு தொடக்கப் பள்ளி
- ஜெயங்கொண்டம் ஏப்ரல் 19
- ஆர்யலூர் மாவட்டம் ஆண்டிமடம் யூனியன் க்ரூஸேடர் யூனியன் தொடக்கப் பள்ளி
- சசிகலா
- ரோசா
ஜெயங்கொண்டம் ஏப். 19: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரோஜா முன்னிலை வகித்தார். விழாவிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
முன்னதாக பள்ளி உதவியாசிரியர் அந்தோணியம்மாள் வரவேற்று பேசினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தனது சிறப்புரையில் மாணவ மாணவிகள் கல்வி மட்டும் இன்றி தனித் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், சிறந்த கல்வியோடு நல்லொழுக்கம், நற்பண்பு, தலைமை பண்பு பெற்று பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நற்பெயரை பெற்று தர வேண்டும். பாட புத்தகத்தை மனப்பாடம் செய்யாமல் ஆராய்ந்து படித்து போட்டித் தேர்வுக்கு தயாராக வேண்டும் எனவும் கூறினார்.
பின்பு கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தி பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறித் திட்ட தன்னார்வலர்கள், ரோடு டு ஸ்கூல் ஆசிரியர் ஜோதி, மாணவ மாணவிகள் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சரிதா நன்றி கூறினார்.
