பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி டெல்லி அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 179 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
