சென்னை: தேர்தல் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி(வியாழக்கிழமை) தமிழ்நாடு சட்டமன்றத்தின் 234 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆகும். அதேநேரம் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 23ஆம் தேதி இந்த ஆண்டின் மிக முக்கிய சுபமுகூர்த்த நாள். சுபமுகூர்த்த நாளில் தான் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது .
ஜனநாயக கடமையாற்றும் அந்த முக்கியமான நாளன்று சுபமுகூர்த்த தினமும் ஆகும், மேலும் இது இந்த வருடத்தின் மிக முக்கியமான வளர்ப்பறை சுபமூர்த்த நாள், இதனால் ஆறு மாதத்திற்கு முன்பே ஏப்ரல் 23ஆம் தேதியை பலரும் முகூர்த்தநாளாக குறித்திருப்பர்.
காதுகுத்து, திருமணம் மற்றும் கிரஹப்பிரவேசம் என பல விஷேசஷங்களுக்கு அன்று நாள் குறித்திருப்பர்.எனவே அனைத்து வேலைகளையும் தொடங்கி இருப்பார். இந்நிலையில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் 23ல் அறிவித்து தேர்தல் ஆணையம் ஷாக் குடுத்தது.எனவே மக்கள் விசேஷங்களுக்கு செல்வார்களா அல்லது வாக்கு சாவடிக்கு செல்வார்களா? திருமண நிகழ்ச்சிகள் வாக்குப்பதிவை பாதிக்குமா?
அதே போல் அன்று தான் கங்காசப்தமி, பத்தாம் உதயம் மற்றும் கிராம திருவிழாக்கள் என பல விஷேசஷங்கள் இருக்கின்றன, அதனால் மக்கள்கள் அந்த கொண்டாட்டத்தில் இருப்பார்களா அல்லது வாக்கு பதிவு செய்ய செல்வார்களா? கடந்த 2021 தேர்தலிலே 73.63% வாக்கு பதிவான நிலையில் இப்போது இந்த சூழ்நிலையில் வாக்கு சதவீதம் குறைய அதிக வாய்ப்புள்ளது.
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் கல்யாணமான புதுமண தம்பதிகள் மாலை கழுத்துடன் வாக்கு சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்வர். தேர்தல் நாளானது மக்களாகிய நமக்கான நாள், எனவே அன்று ஜனநாயக கடமையாற்ற வாக்குச்சாவடிக்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்த வேண்டும். உறவுகளும் முக்கியம் கலாச்சாரமும் முக்கியம் அதைவிட முக்கியமானது உங்கள் ஜனநாயக கடமையை செலுத்துவது அதனால் நீங்கள் உங்கள் ஓட்டை மறக்காமல் செலுத்துங்கள்.
