காஞ்சிபுரம், ஏப்.18: காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் சாரட் வண்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு பெண்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமார், நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் தாமல் வார் தெரு, கம்மாளர் தெரு, சுப்புராயன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது கம்மாளர் தெரு பகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் துணை மேயர் குமரகுருபரன், அன்பு ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் பத்மநாபன், வஜ்ரவேலு, வையாவூர் லோகநாதன், பிச்சாண்டி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து, அறம்பெரும் செல்வி தெருவில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு, சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம், காஞ்சிபுரம் தேர்தல் பார்வையாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மல்லிகா ராமகிருஷ்ணன், சாந்தி கணேஷ், நிர்மலா, தொமுச குமாரசாமி, வரதராஜன், சுகுமார் வினோத்குமார், யுவராஜ், முத்துசெல்வன், மண்டி சம்பத், விநாயகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விப்பேடு அருள்நாதன், திருமாதாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
