×

வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரம்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி, கோவை வடக்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில், வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,Chennai ,Jayakumar ,C.V. Shanmugam ,R.P. Udayakumar ,Dindigul Srinivasan ,Thangamani ,BJP ,Vanathi Srinivasan ,Chennai High Court ,Income Tax Department ,
× RELATED வெல்வோம் ஒன்றாக!: தீரன் சின்னமலை...