×

ஆந்திரா பள்ளி தேர்வில் திருப்பதி நெய் கலப்பட லட்டு குறித்த கேள்வி

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சியின்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கலப்பட நெய் வாங்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். சிபிஐ விசாரித்து நெய் சப்ளை செய்த டெய்ரி நிறுவனத்தினர் என 30க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து அண்மையில் ஆந்திராவில் நடந்த 7ம் வகுப்பு சமூகவியல் தேர்வில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில், ‘திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்தது உண்மை. அதனை வெளிக்கொண்டு வரவேண்டுமா?’ என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பல்வேறு கருத்துக்களை சொந்த நடையில் விடை எழுதியுள்ளனர். தற்போது இந்த கேள்வி இணையதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tirupati ,Andhra ,Tirumala ,Jaganmohan Reddy ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Tirupati Ezhumalaiyan temple ,CBI ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...