×

தஞ்சை தொகுதி பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தீவிர வாக்கு சேகரிப்பு திறந்த ஜீப்பில் சென்று தாமரைக்கு ஆதரவு திரட்டினார்

தஞ்சாவூர், ஏப்.16: தஞ்சாவூர் தொகுதி பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம், கொண்டி ராஜபாளையத்தில் உள்ள யோகா நரசிம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தன்னுடைய வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அதை தொடர்ந்து மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழ ராஜ வீதி, நாலு கால் மண்டபம், ஐயன் கடை தெரு, காசி கடை தெரு, மூலஅனுமான் கோவில் தெரு, வடக்கு வாசல் குடிமரத்து மூளை பழைய பேருந்து நிலையம், செக்கடி ஜெயமாலபுரம், சீனிவாசபுரம், சேப்பனவாரி ஆகிய பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்களை கூறி அப்பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

உடன் மாநகர செயலாளர் சரவணன், அமமுக செயலாளர் ராஜேஸ்வரன், பிகேபி மாவட்ட செயலாளர் ஜெய்சதீஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Thanjavur ,BJP ,Karuppu Muruganandam ,Yoga Narasimhan temple ,Kondi Rajapalayam ,Upper Street ,South Street ,North Street ,Lower Street… ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது