×

மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் டைம் பத்திரிகையில் சுந்தர் பிச்சை விகாஸ் கன்னா, ரன்பீர் கபூர்

நியூயார்க்: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மிச்செலின்-ஸ்டார் சமையல் கலைஞர் விகாஸ் கன்னா, நடிகர் ரன்பீர் கபூர், யூடியூப் தலைவர் நீல் மோகன் மற்றும் நியூயார்க் நகர மேயர் ஜோரன் மம்தானி ஆகியோர் இந்த ஆண்டு டைம் பத்திரிகையால் உலகின் 100 மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் லியோ , அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, கனடா பிரதமர் மார்க் கார்னி, சீன அதிபர் ஷி ஜின்பிங், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2026 ஆர்டெமிஸ் II-இன் தளபதி ரீட் வைஸ்மேன் போன்ற உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கூகிளுக்கு 27 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், சுந்தர் பிச்சையின் தலைமை, கூகிள் ஏஐ ஸ்டுடியோ, நோட்புக் எல்எம், ஜெமினி சிஎல்ஐ மற்றும் ஆன்டிகிராவிட்டி போன்ற புதுமையான ஏஐ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, \\”ஸ்டார்ட்அப் போன்ற சுறுசுறுப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்று டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Tags : Sundar Bichai ,Vikas Khanna ,Ranbir Kapoor ,New York ,Google ,CEO ,Sundar Pichai ,YouTube ,president ,Neil Mogan ,New York City ,Mayor ,Joran Mamtani ,
× RELATED கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியாவிற்கு...