- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சேலம்
- சேலம் கே. ஸ்டாலின்
- Manima
- கமல்ஹாசன்
- Temuthika
- பொதுச்செயலர்
- பிரேமலதா விஜயகாந்த்
- சேலம் அண்ணா
- பிரதம
- அமைச்சர்
சேலம்: சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை பேரணி மேற்கொண்டனர். சேலம் அண்ணா பூங்கா வளாகம் முதல் கோட்டை மைதானம் வரை பேரணி மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; கலைஞர் – எம்.ஜி.ஆர் நட்புக்கு அடித்தளமிட்ட மண் சேலம். தமிழ்நாட்டை செழிக்க வைக்கும் திராவிடமாடல் ஆட்சி தொடர வேண்டும். அனைத்து தொகுதிகளில் தி.மு.க கூட்டணியை வெற்றிப்பெற வைக்க வேண்டும்.
தி.மு.க ஆட்சியில் சேலம் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றம்; சேலம் உருக்காலை, ரயில்வே கோட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ரூ.129 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர், ஆத்தூரில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி, மேட்டூரில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மலைகளின் மாவட்டம் என்று சேலத்தை கூறுவார்கள், மலைகளை மிஞ்சும் அளவுக்கு மகளிர் படை சூழ்ந்துள்ளது
விடியல் பயண திட்டத்தில் 900 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விடியல் பயண திட்டம் மூலம் ரூ.900 வரை பெண்கள் சேமிக்கிறார்கள். விடியல் பயணத் திட்டத்துக்கு பின் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 40%-ல் இருந்து 70%ஆக உயர்ந்துள்ளது. பெண்களின் உழைப்பு இல்லாமல் மனித சமூகம் இல்லை. பெண்கள் வலிமையாக இருந்தால் தமிழ்நாடு வலிமை பெறும். பெண்கள் ஒரே ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் பல குடும்பங்கள் இயங்காது. பெண்களை அங்கீகரிக்க கொண்டு வரப்பட்டதுதான் மகளிர் உரிமைத் தொகை;
ரெஸ்ட்டே இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு ரெஸ்பெக்ட் கொடுக்கும் திட்டம்தான் மகளிர் உரிமைத்தொகை; தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுவார்கள். மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்கள். பலர் கூறியபோதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்றிக் காட்டினேன். மகளிர் இட ஒதுக்கீட்டை வரவேற்கிறேன்; ஆனால் தொகுதி மறுவரையறைதான் பிரச்சனை; தொகுதி மறுவரையறை என்பதன் மூலம் மொத்த தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது. வரலாறு கொடுத்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவை ஒரு முறையாவது எதிர்த்து எடப்பாடி பேச வேண்டும்
பெண்கள் தங்கள் வீடுகளில் போடும் கோலங்கள் மூலம் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பழனிசாமி கடைசிவரை கோழையாக, அடிமையாக இருக்க வேண்டாம்; வரலாறு கொடுத்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவை ஒரு முறையாவது எதிர்த்து எடப்பாடி பேச வேண்டும். தமிழனாக இருந்துவிட்டு தமிழ்நாட்டுக்கு எடப்பாடி துரோகம் செய்யலாமா? டெல்லிக்கு முதுகு வளைந்து இருக்க பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? சேலம் எனும் ஊரில் பிறந்துவிட்டு டெல்லிக்கு இவ்வளவு பயப்படலாமா? தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் எடப்பாடிக்கு மே 4ம் தேதி மக்கள் பாடம் கற்பிக்கப் போகிறார்கள் என்று கூறினார்.
