×

தொகுதி மறுவரையறை மசோதாவை நிராகரிக்கிறோம்; அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும்: மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு

 

டெல்லி: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் ராகுல் காந்தி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, விசிக எம்.பி. ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கபில் சிபல், சுப்ரியா சுலே, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன; தொகுதி மறுவரையறையில் பாஜக சூழ்ச்சி; தொகுதி மறுவரையறை மசோதாவை முழுமையாக நிராகரிக்கிறோம். தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும். அனைத்து மசோதாக்களையும் அவசரகதியில் நிறைவேற்ற பாஜக அரசு துடிக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறியது, ஆனால் மசோதாவில் அதுபற்றி எதுவும் இல்லை.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆதரவை அளித்து வருகின்றன. மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் அரசியல் நோக்கத்துடன் பாஜக கொண்டு வருவதை எதிர்க்கிறோம் என்று கூறினார்.

Tags : MALLIKARJUNA KARKE ,Delhi ,India Coalition Parties ,INDIA ALLIANCE ,PRESIDENT ,MALLIKARJUNA KHARGEV ,
× RELATED சேலம் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை