×

மயிலாடுதுறையில் தடையை மீறி பாதயாத்திரை கூத்தியம்பேட்டை கிராமத்தில்

கொள்ளிடம், பிப்.21: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூர தார் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வயல் மற்றும் பாசன வாய்க்கால், நெற்கதிர்அடிக்கும் களம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு புதியதாக சாலை அமைக்கப்பட்டு பின்னர் அந்த சாலை தார் சாலையாக மாற்றப்பட்டது. அதிலிருந்து அந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 16ம் தேதி தினகரனில் வெளியானது. இதனை அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறியாளர், அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் நேற்று கூத்தியம்பேட்டை கிராமத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் கூத்தியம்பேட்டை கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூர தார் சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மேம்படுத்தும் பணி இரண்டு தினங்களில் துவங்கும் என்றார். உரிய நேரத்தில் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக இருந்த தினகரனுக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : Pathiyathirai ,Koothiyampettai village ,Mayiladuthurai ,
× RELATED கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில்...