×

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: பாஜக தேர்தல் வாக்குறுதி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026″ என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தே.ஜ.கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் -பாஜக வாக்குறுதி

* ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்

* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு முறை ரூ.10,000 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி

* திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் பாஜக தேர்தல் வாக்குறுதி

* தைப்பூசம் திருநாளை மாநில விழாவாக அறிவித்து கொண்டாடப்படும் பாஜக தேர்தல் வாக்குறுதி

* பெண்கள் இருசக்கர வாகனம் வாங்கரூ.25,000 மானியம் வழங்கப்படும் – பாஜக தேர்தல் வாக்குறுதி

* முதல் தலைமுறை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படும்

* வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு செலவுகளுக்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும்

* மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுப்படுத்தி விரைந்து முடிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruparangunaram Hill ,Deepam ,BJP ,Chennai ,Union Minister ,J. B. Nata ,Piyush Goyal ,President ,Nayinar Nagendran ,Lotus ,Kindi Star Cafe ,
× RELATED ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000;...