×

‘தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு சென்று அஞ்சல் வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை, ஏப்.14: இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ‘தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மண்டல அலுவலர் மூலமாக வீடுகளுக்கு நேரடியாக சென்று அஞ்சல் வாக்குபதிவு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் அருணா நேற்று நேரில் பார்வையிட்டார். இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அஞ்சல் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் 12டி-ஐ சமர்ப்பித்த மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் 2,328 பேர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1455 பேர் என மொத்தம் 3,783 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று அஞ்சல் வாக்குப்பதிவு செய்து, பதிவான வாக்குகளை பெற சுற்றுக் குழுக்கள் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் நேற்றும், இன்றையதினம் ஆகிய நாட்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறளானிகள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற உள்ளனர். ஏப்ரல் 13,14 ம் தேதிகளில் வாக்காளர் இருப்பிடத்தில் இல்லையெனில் அந்த வாக்காளருக்கு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் வாக்களிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். சுற்றுக் குழுக்கள் 2 முறை வீடுகளுக்கு நேரடியாக சென்றும் வாக்கு செலுத்தாதவர்கள் ஏப்ரல் 23 அன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது. அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி பகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மண்டல அலுவலர் மூலமாக வீடுகளுக்கு நேரடியாக சென்று அஞ்சல் வாக்குபதிவு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் அருணா, நேரில் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் அருணா இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ‘தேர்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா” தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மொபைல் செயலி மூலமாக பதிவு செய்யும் முன்னோட்ட பணியினை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு ஏப்ரல் 13,14 ம் தேதிகளில் வாக்காளர் இருப்பிடத்தில் இல்லையெனில் அந்த வாக்காளருக்கு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் வாக்களிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

Tags : Election Festival is the Festival of Tamil Nadu ,Pudukottai ,Election Commission of India ,Kovilpatti ,Tamil Nadu Legislative Assembly General Election 2026 ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...